2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

ரமழான் உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

Thipaan   / 2016 ஜூன் 20 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 80 குடும்பங்களுக்கான ரமழான் உலருணவுப் பொதிகள், முஸ்லிம் எயிட் நிறுவனத்தினால், தாருல் ஹிக்மா பாலர் பாடசாலையில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வழங்கி வைக்கப்பட்டன.

வழங்கப்பட்ட பொதிகள் ஒவ்வொன்றும் 2500 ரூபாய் பெறுமதியானவை என முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் சம்சுதீன் மகரூப் தெரிவித்தார்.

இதன் போது யுத்தத்தின் போது உறவுகளை இழந்த குடும்பங்கள், விசேட தேவையுடையோர், கணவனை இழந்தோர், அதிகமான குடும்ப அங்கத்தவர்களை கொண்டோர், போதிய வருமானம் இல்லாதோர் போன்றோருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதில் முஸ்லிம் எயிட் நிருவனத்தின் உத்தியோகத்தர் எம்.றமீஸ், டெரோ அமைப்பின் தலைவர் ஏ.ஜே.இன்பாஸ், ஏ.ஆர்.அன்சார் (ஆசிரியர்), என்.எம்.இர்சான் ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .