2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

ரூ.16 இலட்சம் மோசடி; ஒருவருக்குப் பிணை

எப். முபாரக்   / 2018 டிசெம்பர் 13 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாகன விற்பனையில் 16 இலட்சம் ரூபாயை மோசடி செய்த வாகன உரிமையாளர் ஒருவரை, ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்லுமாறு, கந்தளாய் நீதவான் துசித்த தம்மிக்க உத்தரவிட்டார்.

கண்டி, கட்டுகஸ்தோட்டை பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 27ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த நபர், வாகன விற்பனையின் போது, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த நபரொருவருக்கு மேற்படி மோசடியைச் செய்தாரென, மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், கந்தளாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X