2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

ரூ.4 இலட்சம் மோசடி; யுவதிக்கு விளக்கமறியல்

எப். முபாரக்   / 2019 ஜனவரி 03 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கந்தளாய்ப் பகுதியில் 4 இலட்சம் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 24 வயது யுவதியை, இம்மாதம் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தளாய் நீதவான் துசித்த தம்மிக்க உத்தரவிட்டார்.

சந்தேகநபரான குறித்த யுவதி, ஐவரிடம் மேற்படி பணத்தொகையைப் பெற்று, அதனை மீளக் கையளிக்காது ஏமாற்றிவந்துள்ளாரெனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

யுவதிக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமையக் கைது செய்யப்பட்டாரென, கந்தளாய்ப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X