2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வாக்காளர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பம்

Thipaan   / 2016 ஜூன் 06 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், 2016ஆம் ஆண்டுக்கான வாக்காளர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, கந்தளாய் பிரதேச செயலாளர் எச்.டபிள்யூ. பிரேமதாஸ தெரிவித்தார்.

கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 23 கிராம சேவகர் பிரிவுகளிலும் வாக்காளர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அத்துடன், புதிய வாக்காளர் மற்றும் இடம்பெயர்ந்து கந்தளாய் பிரதேசத்தில் வசிக்கின்ற வாக்காளர் விடயங்களில் கவனம் செலுத்துமாறும் கிராம அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X