2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

விசேட குழுக் கூட்டம்

Niroshini   / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் மௌலானா

கிழக்கு மாகாண உணவுப் பாதுகாப்பு ஆலோசனை சபையின் விசேட குழுக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஆசிய மன்றத்தின் உள்ளூர் பொருளாதார ஆட்சி செயற்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண சுகாதார மற்றும் உள்ளூராட்சி திணைக்களங்களின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அசீஸ் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது, கிழக்கு மாகாணத்திலுள்ள உணவு ஸ்தாபனங்களில் உணவு நஞ்சாகுதல், உணவுகளை பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தல், சுகாதாரமான நீரை பயன்படுத்தல் மற்றும் அவை குறித்து சம்மந்தப்பட்டவர்களுக்கு பயிற்சி வழங்குதல் போன்ற விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டு சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டதாக ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .