2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வெடிமருந்துடன் கைதான அறுவருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2016 நவம்பர் 01 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

அதி சக்தி வாய்ந்த ரீ.என்.ரீ வெடி பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், இம்மாதம் 09ஆம் திகதி மூதூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த மூதூர் பகுதியைச் சேர்ந்த இருவரையும், கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 4 பேரையும், நவம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான், நேற்றுத் திங்கட்கிழமை (31) உத்தரவு பிறப்பித்தார். 

குறித்த நபர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் மூலம் 17 கிலோகிராம் 700 கிராம்
ரீ.என்.ரீ வெடி மருந்து கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .