2025 மே 22, வியாழக்கிழமை

விண்ணப்பங்கள் கோரல்

Princiya Dixci   / 2016 மே 02 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
 

94ஆவது சர்வதேச கூட்டுறவுத் தின விழா போட்டிகளுக்கு திருகோணமலை மாவட்ட பாடசாலை மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 

மாவட்ட கூட்டுறவுச் சபைகளின் தலைமையில் தேசிய ரீதியில் பேச்சு, கட்டுரை மற்றும் சித்திரம் ஆகிய போட்டிகளை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்ட்டுள்ளது. 

சகல போட்டிகளும் 'நிலையான எதிர்காலத்துக்காக கூட்டுறவு ஊடாக சிறுவர் பாதுகாப்பினைக் கட்டியெழுப்புதல்' என்ற தொனிப்பொருளில் அமைதல் வேண்டும். 

இம்மாதம் 10ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ளதால் பங்குகொள்ள விரும்பும் பாடசாலைகளில் இருந்து கனிஷ்ட, சிரேஷ்ட பிரிவுகளுக்கு இரண்டு பேர் வீதம் போட்டியாளர்களின் பெயர் விவரங்கள் அடங்கிய விண்ணப்படிவங்களை, எதிர்வரும் 04ஆம் திகதிக்கு முன்னர் திருகோணமலை மாவட்ட கூட்டுறவுச் சபை, இல. 156, கிறீன் வீதி, திருகோணமலை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். 

இது தொடர்பான மேலதிக விவரங்களுக்கு 026-2222476 என்ற தொலைபேசி இலக்கத்தோடு தொடர்புகொள்ளவும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .