2025 ஜூலை 31, வியாழக்கிழமை

விதிமுறைகளை மீறிய மீனவர்கள் 13 பேர் கைது

Thipaan   / 2016 ஜூன் 30 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா, தீசான் அஹமட்

திருகோணமலை, புறாத்தீவு கடற்பரப்பில், விதிமுறைகளை மீறி சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வந்த மீனவர்கள் 13 பேரைக் கைதுசெய்த கடற்படையினர், அவர்களை, நேற்றுப் புதன்கிழமை (29) இரவு 8.30 மணியளவில் தம்மிடம் ஒப்படைத்தாக, குச்சவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்;.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 13 பேரும் திருகோணமலை, இறக்கக்கண்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நிலாவெளி, புறாத்தீவு பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடித்தமை மற்றும் 7 கிலோமீற்றருக்கு அப்பால் பாவிக்க கூடிய சுருக்கு வலைகளை ஒன்றரைக் கிலோமீற்றருக்குள் பாவித்தமை தொடர்பில், இவர்களுக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து, 03 வள்ளங்களும் 03 என்ஜின்களும் 80 கிலோகிராம் மீன்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், அவர்களை, திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .