Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.யாசீம், எஸ்.சபேசன்,நஹீம் முஹம்மட் புஹாரி
திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் ஒருவர் உயிரிழந்ததுடன், 04 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலையிலிருந்து இன்று திங்கட்கிழமை அதிகாலை வவுனியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த கப் ரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 04 பேர் காயமடைந்துள்ளனர்.
இதில் காயமடைந்தவர்கள் மகாதிவுல்வௌ கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறிருக்க, திருகோணமலை -மூதூர் கங்கைப் பாலத்துக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை (11) மாலை இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூதூரைச் சேர்ந்த 02 பிள்ளைகளின் தந்தையான மீரா சாஹீப் நசுறுதீன் (வயது 39) சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார்.
முச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி வேளையில் வேகமாக வந்துகொண்டிருந்த சிறிய ரக பட்டா வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதியது.
இந்த விபத்துகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் கப் ரக வாகனச் சாரதி, பட்டா வாகனச் சாரதி, முச்சக்கரவண்டிச் சாரதியையும் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், அம்பாறை, சவளக்கடைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 15ஆம் கிராமம் கிணற்றடிச்சந்தியில் ஞாயிற்றுக்கிழமை (11) இரவு நெல் ஏற்றிவந்த லொறி வேகக் கட்டுப்;பாட்டை மீறி விபத்துக்குள்ளானது.
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago