2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

விபத்தில் அறுவர் காயம்; ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை, உப்புவெளி மற்றும் சேருநுவர பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற இரு வௌ;வேறு விபத்துகளில் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் நேற்றிரவு (25) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உப்புவெளி சந்தியில் மோட்டார் சைக்கிளும் டிமோ பட்டா ரக லொறியும் மோதியதில் 04 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த லொறி நிறுத்தாமல்  நிறுத்தாமல் சென்றுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லங்கா பட்டினம் பகுதியில் மீன் ஏற்றிச்சென்ற லொறி மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  02 பேர்  காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மீன் லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .