2026 மார்ச் 25, புதன்கிழமை

விபத்தில் இருவர் காயம்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 20 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, கோமரன்கடவெல பகுதியிலிருந்து திரியாய் நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடனொன்று மோதியதில் காயமடைந்துள்ள இரண்டு பேர் வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை காலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோமரங்கடவெல பகுதியைச் சேர்ந்த ஜெயசிங்க லக்மால் (வயது 37), திருகோணமலை, மின்சார நிலைய வீதியைச் சேர்ந்த மகேந்திரன் சுதன் (வயது 32) ஆகியோரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள்  இருவரும் கோமரங்கடவெல கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஜயசிங்க லக்மால் என்பவர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் இவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .