2025 மே 20, செவ்வாய்க்கிழமை

விபத்தில் இருவர் பலி: சாரதிக்கு விளக்கமறியல் நீடிப்பு

Princiya Dixci   / 2016 ஜூன் 07 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரால்குழி பாலத்தருகில் மே மாதம் 25ஆம் திகதி இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதியை, எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, மூதூர் நீதவான் நீதிமன்ற நீதவான் ஜ.என்.றிஸ்வான், நேற்று திங்கட்கிழமை (06) உத்தரவிட்டார்.

இரால்குழி பாலத்தருகில் மே மாதம் 25ஆம் திகதி, முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த மூன்று இளைஞர்கள் மீது பஸ்ஸினால் மோதியதில், மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பஸ் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்றைய தினமும் (06) குறித்த நபர், மூதூர் நீதிமன்ற நீதவான்  முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்தே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர், திருகோணமலை நிலாவெளி பகுதியைச் சேர்ந்த 35 வயது நபராவார்.

குறித்த பஸ் சாரதிக்கெதிராக ஏற்கெனவே, பஸ்; மூலம் பாதசாரிகளுக்கு உயிர் இழப்பு ஏற்படுத்தியமை மற்றும் காயப்படுத்தியமை தொடர்பாக மட்டக்களப்பு, கல்முனை நீதிமன்றங்களில் மூன்று வழக்குகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X