George / 2016 ஜனவரி 16 , மு.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலங்கை முகத்துவாரம் பகுதியில் முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
வெருகல் - முட்டிச்சேனை பகுதியைச் சேர்ந்த ஜோபாலசிங்கம் வசந்தன் (19 வயது ) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்தநபர், மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் முச்சக்கர வண்டியுடன் மோதியதாக, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது
பிரேத பரிசோதனைக்காக சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
43 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
2 hours ago