2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

திருகோணமலை, ஹொரவ்பொத்தானை பிரதான வீதியில், நேற்று (10) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில், ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூவர் படுகாயமடைந்தது, திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டி, வீதியை விட்டு விலகியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றதாகத் தெரிவித்த பொலிஸார், திருகோணமலை, ரொட்டவௌ பகுதியைச்சேர்ந்த கணவரான என்.ஹுஸைன் (23வயது) மனைவியான பாத்திமா ஸம்ஸம் (21 வயது) மற்றும் எச்.ஹம்தா ( 02வயது) ஆகியோர் இவ்விபத்தில் படுகாயமடைந்ததாகத் தெரிவித்தனர்.

ரொட்டவௌயிலிருந்து திருகோணமலை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டிக்கு குறுக்காக நாய் பாய்ந்தமையினால், முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளனானதாக, பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பில் மொறவௌ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .