2025 மே 23, வெள்ளிக்கிழமை

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

Niroshini   / 2016 மார்ச் 26 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை-உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட கன்னியா பகுதியில் நேற்று(25) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கன்னியா- கிளிகுஞ்சுமலை பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான  சானப்பிரகாசம் (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கற்குவாரியில் கற்களை ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்த கனரக வாகனத்தின் பின்புறமாக ஏறுவதற்கு முற்பட்ட குறித்த நபர் கால் தவறி கீழே வீழ்ந்து அதே வாகனத்தில் சிக்குண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப் பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X