2026 மார்ச் 23, திங்கட்கிழமை

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு; அறுவர் காயம்

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 06 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சபைக்கு முன்பாக நேற்று வியாழக்கிழமை இரவு வாகனமொன்று மின்கம்பத்துடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 06 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உவர்மலைப் பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் வேலை செய்பவர்களே இவ்வாறு விபத்தில் சிக்குண்டுள்ளனர்.

உவர்மலைப் பகுதியைச் சேர்ந்த மனோகரன் ரொபின்சன் (வயது 21) என்பவரே உயிரிழந்துள்ளார். இதில் படுகாயமடைந்தவர்கள்  திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்தின்போது சாரதி மதுபோதையில் இருந்ததாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .