Suganthini Ratnam / 2015 நவம்பர் 26 , மு.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாய் ரஜஎல வீதியில் மோட்டார் சைக்கிளும்; முச்சக்கரவண்டியும் நேற்று புதன்கிழமை இரவு மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கந்தளாயைச் சேர்ந்த சுரேஸ் பிரியந்த (வயது 35) காயமடைந்த நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டிச் சாரதி மதுபானம் அருந்தியிருந்ததாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. மேலும், சாரதிகளின் கவனயீனமே இந்த விபத்துக்கு காரணமெனவும் பொலிஸார் கூறினர்.
விபத்தைத் தொடர்ந்து, முச்சக்கரவண்டிச் சாரதியை பொலிஸார் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago