2025 மே 17, சனிக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்

Thipaan   / 2016 நவம்பர் 20 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து பயணித்தவர் உயிரிழந்துள்ளதாகவும் ஓட்டுநர் படுகாயமடைந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்ற விபத்தில், சேருவில, காவன்திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த ருவன் அசங்க (35 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் இரண்டு பேரும் வீதியில் சறுக்கி விழுந்து காயங்களுக்குள்ளான நிலையில், சேருநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில், ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டிருந்தமையால், அவர், மேலதிக சிகிச்சைகளுக்காக, திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். எனினும், செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான ஜனக குமார (39 வயது) சேருநுவர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாவும் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .