Princiya Dixci / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை, மகாதிவுள்வௌ விகாரைக்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை (18) மாலை 04.20 மணியளவில் நடந்து சென்றுகொண்டிருந்த ஆறு வயது சிறுமி மீது கார் மோதியதில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மகாதிவுள்வௌ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், குறித்த சிறுமி திருகோணமலை பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
மகாதிவுள்வௌ பகுதியைச் சேர்ந்த துமிதி நிக்லேசா (வயது 06) எனும் சிறுமியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
சிறுமியின் வீட்டுக்கு முன்னாலுள்ள பௌத்த விகாரைக்கு சென்று வீடு திரும்புகையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை மொறவௌ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026