Suganthini Ratnam / 2016 ஜனவரி 27 , மு.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் இன்று புதன்கிழமை காலை பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த மாணவன் ஒருவன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில், படுகாயமடைந்த மாணவன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆறாம் தரத்தில் கல்வி பயிலும் நிப்கி முகம்மட் (வயது 12) என்ற மாணவனே விபத்துக்கு உள்ளாகியுள்ளான்.
வீதியை கடக்க முற்பட்ட இந்தச் சிறுவன் மீது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், மோட்டார் சைக்கிளில் சென்றவர் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லையென பொலிஸார் கூறினர்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6 minute ago
14 minute ago
37 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
14 minute ago
37 minute ago
39 minute ago