2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

விபத்தில் மூவர் காயம்; சாரதி கைது

Suganthini Ratnam   / 2016 ஜூன் 01 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாம்பல்தீவு பகுதியில் அமைந்துள்ள சல்லி முத்துமாரியம்மன் கோவிலின் இறுதி நாள் திருவிழாவுக்காக அக்கோவிலுக்குச்  சென்றுகொண்டிருந்த மூன்று பேர், செவ்வாய்க்கிழமை (31) இரவு விபத்துக்குள்ளானத்தைத் தொடர்ந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தம்பலகாமம், கல்லிமேடு பகுதியைச் சேர்ந்த தந்தையான பீ.ரங்கநாதனும் (வயது 51), அவரது மகனான ஆர்.கிஷோத்தும் (வயது 14) திருவிழாவுக்காக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர். இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் காரும் மோதி விபத்துக்கு உள்ளானதில் இவர்கள் இருவரும் காயமடைந்தனர்.

இந்த விபத்தைத் தொடர்ந்து காரின் சாரதியைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்தத் திருவிழாவுக்காக அன்புவெளிபுரம் பகுதியிலிருந்து உழவு இயந்திரத்தில் பயணித்துக்கொண்டிருந்த வை.அபிநாத் (16 வயது) அதிலிருந்து தவறி விழுந்து காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.  
இந்த விபத்துகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .