2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வெற்றிடங்களை விரைவில் பூர்த்தி செய்ய நடவடிக்கை

Niroshini   / 2016 ஜூலை 02 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்   

இணக்க சபைகளில் நிலவும் வெற்றிடங்களை விரைவில் நிரப்புவதற்கு நீதி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மன்னார், பதுளை, கண்டி, கம்பஹா, குருநாகல், ஹம்பாந்தோட்டை, காலி, மொனராகலை, கேகாலை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளது.

மேலும், இணக்க சபைகளை வலுவூட்டுவதன் ஊடாக பிரதேச மட்டத்தில் நிலவும் சில பிரச்சனைகளுக்கு தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் வருடம் ஒன்றுக்கு சுமார் இரண்டு  இலட்சம் முறைப்பாடுகள் இணக்க சபைகளுக்கு கிடைப்பதுடன் அவற்றின்  50 சதவீதமான முறைப்பாடுகளுக்கே இணக்கப்பாடு எட்டப்படுவதாகவும் நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X