2026 மார்ச் 25, புதன்கிழமை

வெளிநாட்டு மதுபானங்களுடன் ஒருவர் கைது

Princiya Dixci   / 2016 ஜனவரி 25 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக் 

திருகோணமலை, சுமேதகப் பகுதியில் வெளிநாட்டு மதுபான போத்தல்கள் ஐந்தை வைத்திருந்த ஒருவரை, நேற்று ஞயிற்றுக்கிழமை (24) கைதுசெய்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுமேதகம பகுதியில் வெளிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்து வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேகநபரின் வீட்டில் பொலிஸார் சோதனை மேற்கொண்ட போது, 05 வெளிநாட்டு மதுபானங்களைக் கைப்பற்றியுள்ளதுடன், அதனை வைத்திருந்த 34 வயதுடைய சந்தேகநபரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.  

குறித்த சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு இன்று திங்கட்கிழமை (25) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .