Suganthini Ratnam / 2016 ஜனவரி 25 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் ஐந்தை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 34 வயதுடைய ஒருவரை அடுத்த மாதம் மூன்றாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் ரி.சரவணராசா, இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்.
திருகோணமலை, சுமேதகமப் பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து வெளிநாட்டு மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக தமக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, சந்தேக நபரின் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை (24) மாலை சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் ஐந்தை கைப்பற்றியதுடன், சந்தேக நபரையும் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
13 minute ago
21 minute ago
44 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
21 minute ago
44 minute ago
46 minute ago