2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

வெவ்வேறு விபத்துகளில் அறுவர் காயம்

Suganthini Ratnam   / 2016 மே 12 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ள வெவ்வேறு விபத்துகளில் ஆறு பேர் காயமடைந்த நிலையில்,  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மத்திய வீதியில் வேகமாக பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, நிறுத்தப்பட்டிருந்த  லொறியுடன் மோதியதில், மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்கோ பகுதியைச் சேர்ந்த எஸ்.எம்.அமில (வயது 23) என்பவரே இதன்போது காயமடைந்துள்ளார்.


இதேவேளை, கிளிவெட்டிப் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதியதில் காயமடைந்த நான்கு பேர் கிளிவெட்டி கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதில் இலிங்க நகர் பகுதியைச் சேர்ந்தவர்களான  கே.கபில்றாஜ் (வயது 23), எஸ்.சசிகரன் (வயது 36), ஆலங்கேணிப் பகுதியைச் சேர்ந்த காலிமுத்து சதீஸ்குமார் (வயது 26), எம்.பாஸ்கரன் (வயது37) ஆகியோரே காயமடைந்துள்ளனர்.

கிண்ணியா, காக்காமுனைப் பகுதியில் சைக்கிளுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் சைக்கிளில் சென்ற எம்.ஜலீல் காயமடைந்துள்ள நிலையில், கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  

இந்த விபத்துகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .