2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

வெவ்வேறு விபத்துகளில் 15 பேர் காயம்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம், எம்.எஸ்.எம்.நூர்தீன், எப்.முபாரக்

திருகோணமலை மற்றும் மாவட்டங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ள வெவ்வேறு விபத்துகளில் 12 கடற்படையினர் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளனர்.

திருகோணமலை -புத்தளம் பிரதான வீதியில் திரியாய் சந்திக்கு அருகில் கடற்படையினரின் பஸ்ஸும் டிப்பர் ரக வாகனமும் நேருக்குநேர் மோதியதில், 12 கடற்படையினரும் லொறியின் சாரதியும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ்  வேகக் கட்டுப்பாட்டை இழந்து லொறியுடன் மோதியதாகத் தெரியவருகின்றது.

இவ்விபத்தில் படுகாயமடைந்தவர்கள்  மகாதிவுள்வௌ கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறிருக்க, சேருநுவர -கந்தளாய்ப்; பிரதான வீதியில் வானும்  மோட்டார் சைக்கிளும் மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த கந்தளாயைச் சேர்ந்த சமன் விஜயசிறி வயது (42) படுகாயமடைந்து  கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதான வீதியில் மஞ்சள் கோட்டைக் கடக்க முற்பட்ட பாடசாலை மாணவியொருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில், அம்மாணவி காயமடைந்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரத்தியேக வகுப்புக்குச் சென்றுகொண்டிருந்தபோதே இந்த மாணவி விபத்துக்குள்ளானார்.

இந்த விபத்துகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .