Niroshini / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

-நஹீம் முஹம்மட் புஹாரி
சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலிஒலுவ பிரதேசத்தில் அரச வங்கியொன்றில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய கிளிவெட்டி பாரதிபுரத்தை சேர்ந்த அப்துல் ஜப்பார் (வயது 35) என்பவரை சேருநுவர பொலிஸார் திங்கட்கிழமை(26) கைதுசெய்துள்ளனர்.
குறித்த நபர் வங்கியின் உற் பகுதியை படம் எடுத்தும் கொண்டிருந்ததை அவதானித்த வங்கி முகாமையாளர் இது தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபரை இன்று செவ்வாய்க்கிழமை மூதூர் நீதிமன்ற பதில் நீதிபதி ஜ.முபாரிஸ் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது,குறித்த நபரை ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்ததோடு நவம்பர் மாதம் 3ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவு பிறப்பித்தார்.
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago