2025 மே 23, வெள்ளிக்கிழமை

வடிசாராய போத்தல்களுடன் நடமாடியவர்களுக்கு அபராதம்

Niroshini   / 2016 மார்ச் 30 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புஹாரி

வடிசாராய போத்தல்களுடன் நடமாடிய மூவருக்கு மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் இன்று புதன்கிழமை தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிக்குடியிருப்பு கிராமத்தில் வடிசாராய போத்தல்களுடன் நடமாடிய தோப்பூர், அல்லைநகர் கிராமத்தைச் சேர்ந்த மூவரை சம்பூர் பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் சம்பூர் பொலிஸார் இன்று புதன்கிழமை மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்தே, தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X