Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.என்.எம்.புஹாரி
சட்டவிரோதமாக வடிசாராயம் காய்ச்சி விற்பனை செய்துவந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 40 வயதுடைய ஒருவருக்கு மூதூர் நீதிமன்ற நீதவான் இல்யாஸ் முபாரிஸ் 15,000 ரூபாய் தண்டம் விதித்துள்ளார்.
சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சிலம்பற்று, முத்துச்சேனைப் பகுதியில் வடிசாராயம் காய்ச்சுவதாக சேருநுவர பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியபோது இவர் கைதுசெய்யப்பட்டார். அத்துடன், இந்த நபரின் வீட்டிலிருந்து 09 சட்டவிரோத வடிசாரயப் போத்தல்களையும் வடிசாராயம் காய்ச்சுவதற்காக பயன்படுத்தப்படும் கோடா உள்ளிட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், சட்டவிரோத வடிசாராயம் காய்ச்சி விற்பனை செய்து கைதுசெய்யப்பட்டதற்காக மற்றுமொரு வழக்கு மூதூர் நீதிமன்றத்தில் இவருக்கு எதிராக இடம்பெற்று வருவதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
8 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago