2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

வடிசாராயம் விற்ற பெண்ணுக்கு அபராதம்

Niroshini   / 2016 ஜனவரி 12 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.புஹாரி

சட்டவிரோத வடிசாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த 55 வயது பெண்ணுக்கு 30,000ரூபாய் அபராதம் விதித்து மூதூர் நீதிமன்ற நீதிவான் ஜ.றிஸ்வான் நேற்று(11) தீர்ப்பு வழங்கினார்.

மூதூர் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட மேம்காமம் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் வடிசாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த குறித்த  பெண் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த மூதூர் பொலிஸார், அவரிடமிருந்து  5,000 மில்லி லீற்றர் வடிசாராயத்தை கைப்பற்றி அவரையும் கைது செய்தனர்.

குறித்த பெண்ணுக்கெதிராக இரண்டு வழக்குகள் தொடர்ந்தும் மூதூர் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .