Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 03 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம்
இவ்வாண்டு (2019) வரவு - செலவுத் திட்டத்தில், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கல்வி வளர்ச்சிக்காக அதிக நிதியொதுக்கீடு செய்யப்படவுள்ளதாகத் தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், “நல்லாட்சி அரசாங்கத்தின் கடந்த 4 வருடங்களில், இம்மாகாணங்கள் கல்வித்துறையில் மாத்திரமன்றி, அனைத்துத் துறைகளிலும் அபிவிருத்தி கண்டு வருகின்றன” என்றார்.
கிண்ணியா மத்திய கல்லூரியில், நேற்று (02) நடைபெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு விழாவில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கல்லூரி அதிபர் எஸ்.எம்.எம். அனிபா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் இராஜாங்க அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தேசிய பாடசாலைகளிலும் குறைபாடுகள் நிலவுகின்றன என்றார்.
இவற்றை நிவர்த்தி செய்வதற்காகவே, ஆசிரியர் நியமனம் உட்பட பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும், அவர் தெரிவித்தார்.
அத்துடன், “அருகிலுள்ள பாடசாலை மிகச் சிறந்த பாடசாலை” என்ற கருத்திட்டத்தின் ஊடாக, அனைவருக்கும் சமமான கல்வியை வழங்கி, இந்த நாட்டில் புதியதொரு புரட்சியை ஏற்படுத்தி, நல்லாட்சி அரசாங்கம் சாதனை படைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையத் தவறுகின்ற மாணவர்களுக்கு வழிகாட்டத் தவறியதன் விளைவுதான் நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கான காரணமாகுமெனவும் அவர் தெரிவித்தார்.
எனவே, தொழில் ரீதியாக இவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய தேவையை உணர்ந்தே, 13 வருட உத்தரவாத கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாகவும் இப்புதிய திட்டத்தின் காரணமாக, பாடசாலைகள் நேரடியாக தொழில் கல்வியையும் வழங்கக்கூடிய இடமாக மாற்றம் பெற்றிருக்கின்றதெனவும், கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago