2026 மார்ச் 19, வியாழக்கிழமை

வடிசாராயம் காய்த்த இருவர் கைது

எப். முபாரக்   / 2017 நவம்பர் 12 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, ஜயந்திபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், வடிசாராயம் காய்த்த இடமொன்றினை முற்றுகையிட்ட பொலிஸார், இரண்டு சந்தேக நபர்களை நேற்றிரவு (11) கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் வான்எல மற்றும் சூரியபுர பகுதியைச் சேர்ந்த 54,மற்றும் 38 வயதுடைய நபர்களை​யே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், இவர்களிடமிருந்த  மூன்று பரல்கள்,மூன்று சீனி மூட்டைகள், இரண்டு மூடை கோடாக்கள் மற்றும் குழாய் வட்டைகள் போன்றவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .