2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

“ வன்முறைகளை இல்லாதொழிப்போம்”

Janu   / 2024 ஜூலை 10 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்க கோரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று புதன்கிழமை (10) இடம் பெற்றது.

கிளிவெட்டி தங்க நகர் பகுதி சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து இப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர் . அண்மையில் நடேஸ் குமார் வினோதி எனும் யுவதி கொலை செய்யப்பட்டு கிணற்றினுள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து அப் பகுதியினர் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

குறித்த கொலையினை மேற்கொண்டவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் பிணை வழங்கக் கூடாது போன்ற விடயங்களை முன்வைத்து, பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். 

ஏ.எச் ஹஸ்பர் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .