2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு

Thipaan   / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

திருகோணமலை, இறக்ககண்டி வாழையூற்று பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து, வயோதிபப் பெண்ணின் சடலமொன்றை இன்று (11)  மீட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இறக்ககண்டி-05ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த பத்மநாதன் வல்லிநாயகி (56வயது) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

குறித்த வயோதிபப் பெண்ணின் கணவரான சுந்தரம் பத்மநாதன் (59வயது) சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் தொடர்பாக பேசிவிட்டு வயோதிபப்பெண் நித்திரைக்குச் சென்றதாகவும் பொலிஸ் ஆரம்பக்கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

அதனையடுத்து இன்று காலை அயலவர்கள் சென்று பார்வையிட்ட போது, வீட்டில் இறந்து கிடப்பதை அவதானித்ததாகவும் பொலிஸாருக்கு தெரிவித்தனர்.

இதனையடுத்து சடலத்தை மீட்ட பொலிஸார் மீட்கப்பட்ட சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

வயோதிபப்பெண் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி ஹரித்த தென்னகோன், மரண விசாரணையின் பின்னர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X