2025 மே 05, திங்கட்கிழமை

வயிற்றுவலியில் வைத்தியசாலை சென்ற இளைஞனுக்கு கொரோனா

Princiya Dixci   / 2021 மே 31 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை- தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட இளைஞனுக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

தம்பலகாமம், சிராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இந்த இளைஞனுக்கு நேற்று (30) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் மூலம் இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இளைஞர் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் விபத்துப் பிரிவில் தனி அறையில் அனுமதிக்கப்பட்டு, வயிற்றுவலிக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக விடயத்துக்கு பொறுப்பான வைத்தியப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதனையடுத்து, இளைஞனை கொரோனா இடைநிலை  சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் இவருடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்குரிய  நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X