2026 மார்ச் 23, திங்கட்கிழமை

வறிய மக்களின் ஜீவனோபாயத்தை மேம்படுத்த ஏற்பாடு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 03 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

கிழக்கு மாகாணத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கின்ற மக்களின் ஜீவனோபாயத்தை மேம்படுத்துவதற்கு ஆவண செய்வதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைக்கான தலைமை அதிகாரி கிளேயர் மெட்ராட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டுக்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைக்கான தலைமை அதிகாரி கிளேயர் மெட்ராட்டுக்கும் இடையிலான சந்திப்பு, மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதன்போது, வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மக்களின் ஜீவனோபாயத்துக்கு உதவுமாறு முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
இந்தச் சந்திப்பின்போது காணாமல் போனோர் விவகாரம், மீள்குடியேற்றம், விவசாயம், தொழில்நுட்பத்துறையை மேம்படுத்துதல் ஆகியவை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், கிழக்கு மாகாணத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தின்  நடவடிக்கைகள் கடந்த காலத்தில் ஸ்தம்பிதமடைந்திருந்ததாகவும் அதன் நடவடிக்கை துரிதப்படுத்தி செயற்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .