2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட மூவருக்கு சிறை

Princiya Dixci   / 2017 மார்ச் 29 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன் ஆனந்தம்

அரச மரக்கூட்டுத்தாபன நிதியை வழிப்பறிக் கொள்ளை செய்த மூவருக்கு அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனை திருகோணமலை மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது. 

திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இவ்வழக்கு பல வருடங்களாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், மேல் நீதிமன்ற நீதிபதி அ.பிரேம் சங்கர் முன்னிலையில் இன்று (29) விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போதே, மேற்படி மூவருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  

அரச மரக்கூட்டுத்தாபன நிதியை சேருவில மரக்கூட்டுத்தாபன நிலையத்திலிருந்து எடுத்து வந்த வேளையில், கந்தளாய், ரஜஅல இடத்தில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டமை தொடர்பில், மேற்படி மூவர் மீதும் வழக்குத் தொடரப்பட்டது.  

இவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டமையால் ஒவ்வொருவருக்கும் மூன்றாண்டு சிறைத்தண்ட விதித்த நீதிபதி, 7 இலட்சத்து 43 ஆயிரம் ரூபாயை அபராதமாகச் செலுத்துமாறு உத்தரவிட்டார். தவறும் பட்சத்தில் மேலும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X