2025 மே 23, வெள்ளிக்கிழமை

வழக்கு தவணைகளுக்கு சமூகமகளிக்காதவர் கைது

Kogilavani   / 2016 ஏப்ரல் 22 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்                 

கடந்த 2013ஆம் ஆண்டு, சேருநுவர பகுதியில் 13  வயதுடைய சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சந்தேக நபர்,   பல வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காததால் பொலிஸார் அவரை நேற்று(21) கைதுசெய்துள்ளார்.                             

சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்.பி.நான்கு பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.                            
சிறுமியை பல தடவைகள் வன்புணர்வுக்கு உட்படுத்தியக் குற்றச்சாட்டில் மேற்படி இளைஞருக்கு எதிராக மூதூர் நீதிவான் நீதிமன்றில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இவர் பல வழக்குகளுக்கு சமூகமளிக்காது தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில் இவ் இளைஞரை சேருநுவர பொலிஸார் நேற்று கைதுசெய்ததுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X