எப். முபாரக் / 2018 ஒக்டோபர் 13 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை - கந்தளாய் பகுதியில், இன்று (13) காலை ஓட்டோ ஒன்றுடன் டிப்பர் வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், ஓட்டோவில் பயணித்த இருவர் பலத்த காயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தளாய், முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த ஆதம் லெப்பை ஹமீது (வயது 53), ஏ.எஸ்.சதாத்( வயது 28) ஆகிய இருவருமே காயங்களுக்குள்ளாகியுள்ளனர் எனத் தெரிவித்தனர்.
முள்ளிப்பொத்தானையிலிருந்து தம்புள்ளைக்குச் சென்ற ஓட்டோவும் வென்ராசன்புர பகுதியிலிருந்து கங்கைக்கு மணல் ஏற்ற சென்ற டிப்பர் வாகனமுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளானதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
டிப்பர் வாகனத்தின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், விபத்து தொடர்பில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
26 minute ago
38 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
38 minute ago
44 minute ago