2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

வாகன விபத்தில் சாரதி ஸ்தலத்தில் பலி

Editorial   / 2021 டிசெம்பர் 27 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி -திருகோணமலை வீதி, 96ஆம் கட்டை முள்ளிப்பொத்தானை  பகுதியில் இன்று (27)காலை இடம்பெற்ற கனரக வாகன விபத்தில் சாரதி ஸ்தலத்தில் பலியாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையில் இருந்து சீமெந்து ஏற்றிச் சென்ற கனரக வாகனமும் திருகோணமலையை நோக்கி மண் கலந்த சிறிய கல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதில் சீமெந்து ஏற்றிச் சென்ற வாகன சாரதியே ஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.

கல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகன சாரதி படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரதான வீதியில் விபத்து ஏற்பட்டமையால் அவ்வீதியூடான போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டிருந்ததுடன், விபத்துக்குள்ளான வாகனங்கள் இரண்டும் பெப்கோ இயந்திரத்தைக் கொண்டு அப்புறப்படுத்தப்பட்டன.

உயிரிழந்தவரின் சடலம், திருகோணமலை பொது  வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X