Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூலை 18 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை தீர்மானித்த மாவட்டமாக திருகோணமலை இருந்துள்ளது என்பதை கடந்த கால வாக்குப் பதிவுகள் கூறுகின்றதென தெரிவித்த, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஹ்ரூப், சிறுபான்மை சமூகத்தை ஜனாதிபதி ஏமாற்றி வாக்குறுதிகளை மறந்து செயற்படுகிறாரெனவும் தெரிவித்தார்.
தம்பலகாமம் மீரா நகர் பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று (17) மாலை இடம் பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்
அதிகமான வாக்குகளை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவுக்கு எமது மாவட்ட மக்கள் அளித்திருந்தார்கள்.
மஹிந்த ராஜபக்ச திருமலையில் பெற்றுக் கொண்ட வாக்கு 7132, மைத்திரி பால சிறிசேன பெற்றது 57,532 இவ்வாறிருக்க நாட்டினுடைய ஆட்சி மாற்றங்கள் காலத்துக்கு காலம் வேறுபட்டுள்ளதெனவும் கூறினார்.
கட்சி பேதமற்ற, இன பேதமற்ற சேவையை நாங்கள் செய்து வருகிறோம், முதலில் குறைகளை கண்டு அதற்கான தீர்வினை வழங்குவோம் என்று கூறிய மஹ்ரூப் எம்பி, தேடி வரும் நபர்களை எந்த கட்சி என்று ஒரு போது பார்த்தது கிடையாது எனவும் ஏனையவர்கள் முன்வைக்கும் பிரகடனத்துக்கு மாறாக தாங்கள் கோரும் பிரேரணைக்கு ஒத்த பிரேரணையாக இரு வாரத்துக்குள் தோப்பூர் பிரதேச செயலகமும் உள்வாங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அடுத்து வரும் தேர்தல் நாடாளுமன்ற தேர்தலோ , மாகாண சபைத் தேர்தலோ அல்ல ஜனாதிபதி தேர்தல். இதற்கான உத்தியோகபூர்வமான அறிவுப்பு செய்யபடவுள்ளது. நவம்பர் மாதத்திற்குள் காலம் அறிவிக்கப்படும் நீதிமன்றம் சென்று யாரும் தேர்தலை தடுக்க முடியாது.
குறித்த காலத்தினுள் நடாத்தியே தீருவேன் என தேர்தல் ஆணையாளர் அறிவித்திருப்பது நாம் இதை இலக்காக வைத்து புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க செயற்பட வேண்டும். சிறுமான்மை சமுகத்தின் பாதுகாப்பு, இளைஞர்களின் எதிர்காலம் போன்றவற்றை சிந்தித்து ஓரணியில் திரண்டு ஜனநாயக ரீதியான அதிகார பரவலாக்கம் தொடர்பில் எமது தலைமைகளுடன் ஒத்தாசைகளை புரிந்துணர்வுடன் செயற்படக் கூடிய தேசிய முன்னணிக்காக ஆதரவுகளை அளிக்க வேண்டும்.
அபிவிருத்திகளை செய்தாலும் நிம்மதியாக தலை நிமிர்ந்து இந்த மண்ணில் தன்மானத்தோடு வாழக் கூடிய அரசியல் சாணக்கியனாக செயற்படுவதற்கான தலைவர் ரிஷாடிற்கு தொடர்ந்தும் ஆதரவளிப்போம்.
மொட்டுக் கட்சி,வெற்றிலை, கதிரை என்கிற நிலை இல்லாமல் இந்த பிரதேசத்தில் உள்ளவர்கள் ஓரணியில் நின்று சமூக ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் வலியுறுத்தி குரல் கொடுப்போம் என்றார்.
3 hours ago
7 hours ago
13 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
13 Aug 2025