Editorial / 2018 ஜனவரி 06 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக்
கந்தளாய், பேராற்றுவெளி, எரிக்கிலம் காடு, பாம் வாய்க்காலில் குளித்த ஒருவர், நீரில் முழ்கி உயிரிழந்த நிலையில், இன்று (06) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென, கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர், மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடைய சந்திர ரத்னா என இனங்காணப்பட்டுள்ளார் எனவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர், தனிமையில் லாரியொன்றில் வந்து, வீதியோரத்தில் லாறியை நிறுத்தி விட்டு, இந்த வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த போது, உயிரிழந்திருக்கலாமெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம், கந்தளாய் பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணையை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


48 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago