2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

வாய்க்காலில் விழுந்து வயோதிப பெண் மரணம்

Princiya Dixci   / 2021 மே 25 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, சாந்திபுரம் பகுதியில் குளிக்கச் சென்ற வயோதிபப் பெண்ணொருவர், வாய்க்காலில் தவறி விழுந்து மரணம் அடைந்த சம்பவமொன்று, நேற்று (24)  பிற்பகல் பதிவாகியுள்ளது.

சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த அயிலந்தன் பெருமாள் (78 வயது) எனும் பெண்ணே மரணமடைந்துள்ளார்.

இவருடைய சடலம் வாய்க்காலில் மிதந்து கொண்டிருக்கும்போது, பிரதேச இளைஞர்களால் மீட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

பெண்ணின் சடலம் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X