2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

வாள் வெட்டில் 10 பேர் படுகாயம்

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஒக்டோபர் 22 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, மட்கோ, மஹாமாயபுர  பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில், 10 பேர், திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று (22)  அனுமதிக்கப்பட்டுள்ளனரெனப் பொலிஸார்  தெரிவித்தனர்.

இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாலேயே இந்த வாள்வெட்டு இடம்பெற்றதாகவும் பொலிஸார்  தெரிவித்தனர்.

குறித்த வாள்வெட்டுச் சம்பவத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த டி.பி.அமரகீர்த்தி

( 47 வயது), ஆர்.தினுஷா பியந்தி (39 வயது), டி.பி. அக்சயா (22 வயது), டி. பி. டி சான் (17 வயது)  ஆகியோர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனரெனத் தெரியவந்துள்ளது.

இதேவேளை, வாளால் வெட்டியதாகக் கூறப்பட்ட மற்றைய குழுவைச் சேர்ந்த அறுவரும் 19, 24, 27, 38, 47, 52 வயதுடையவர்கள் எனவும் அவர்களும் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில், திருகோணமலை தலைமையகப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X