2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

விசேட கல்வி அலகு ஆசிரியர்களுக்கான பயிற்சிப்பட்டறை

வடமலை ராஜ்குமார்   / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்ட விசேட கல்வி அலகு ஆசிரியர்களுக்கான ஐந்து நாள்கள் பயிற்சிப்பட்டறை, சர்வோதய வள நிலையத்தில், இன்று (26) ஆரம்பமானது. 

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம், நவஜீவன நிறுவனம் ஆகியன இணைந்து நடத்துகின்ற இப்பயிற்சிப்பட்டறை, தேசிய கல்வியகத்துடன் இணைந்து நவஜீவன நிறுவனம் தயாரித்துள்ள வழிகாட்டல் கையேட்டை அடிப்படையாக வைத்து இடம்பெறுகின்றது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் விசேட கல்விப் பிரிவில் விருத்தி செய்யவும் ஆசிரியர்களின் வாண்மை விருத்தியை ஏற்படுத்தவும் இப்பயிற்சிப்பட்டறை உறுதுணையாக அமையுமென, ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

10 தினங்கள் ஒருங்கமைக்கப்பட்டுள்ள இப்பயிற்சிப்பட்டறை 5 தினங்கள் விரிவுரையும் 5 தினங்கள் செயற்பாட்டுக் கல்வியுமாக அமையுமெனவும் ஏற்பாட்டளர்கள் தெரிவித்தனர்.

இந்தச் பயிற்சிப்பட்டறையில், கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் விசேட கல்விப் பிரிவின் இணைப்பாளர் ஜெனார்த்தன், திருகோணமலை வலயக் கல்வி அலுவலக சேவைக்கால ஆலோசகர் கே.அகிலன், நவஜீவன நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் முதிதகுமார, விடய ஒருங்கிணைப்பாளர் பியூமி இரேஸா மாவட்ட இணைப்பாளர் சுல்பிகா சம்சுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .