2025 மே 05, திங்கட்கிழமை

விசேட செயலணியில் முஸ்லிம்களுக்கு கதவடைப்பு?

Princiya Dixci   / 2021 மே 26 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீட், தீஷான் அஹமட், அ.அச்சுதன்

கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யகம்பத்தால் நியமிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண கொவிட் 19 தடுப்பு விசேட செயலணியில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

“கொவிட் 19 நிலைமைகள் தொடர்பாக பொதுமக்களின் முறைப்பாடுகளைப் பெற்று, தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் விசேட செயலணியை அமைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

“பிரதான அமைப்பாளர் ஒருவரும், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கென தலா இருவருமாக மொத்தம் 7 பேர் இந்த செயலணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும், இந்த 7 பேரில் ஒருவர் கூட முஸ்லிம் சமூகப் பிரதிநிதி இல்லை.

“கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை முஸ்லிம் சமூகமும் முக்கியமானது. தற்போதைய இந்த கொவிட் 19 அனர்த்தத்தில் அதிக பாதிப்புகளை முஸ்லிம்களும் சந்தித்துள்ளனர்.

“இந்நிலையில், முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் ஒன்றாவது இந்த விசேட செயலணியில் சேர்க்கப்படாமைக்கு காரணம் என்ன?

“கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் விருப்பு வாக்குகளால் வெற்றி பெற்றுள்ள 6 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்போது அரசுக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.

“திருகோணமலை மாவட்டத்தில் எம்.எஸ்.தௌபீக், மட்டக்களப்பு மாவட்டத்தில் நஸீர் அஹ்மத், அம்பாறை மாவட்டத்தில் எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசீம், ஏ.எல்.எம்.அதாவுல்லா, எஸ்.எம்.எம்.முஷர்ரப் ஆகியோரே இந்த முஸ்லிம் எம்.பிக்களாவர்.

“கிழக்கு மாகாண ஆளுநரின் இந்த விசேட செயலணியில் குறித்து இந்த எம்.பிக்கள் என்ன சொல்லப் போகின்றார்கள்? இது தொடர்பில் அவர்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X