2025 மே 05, திங்கட்கிழமை

விசேட தேவையுடைய மாணவர்களின் கண்காட்சி

வடமலை ராஜ்குமார்   / 2018 நவம்பர் 13 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கல்விப் பிரிவின் கண்காட்சி நிகழ்வு இன்று (13) திருகோணமலை அன்புவழிபுரம் தி/கலைமகள் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இப்பிரிவு, ஆரம்பிக்கப்பட்டு 10வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில்,  கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

ஆசிரியர்களின் வழிகாட்டலில், விசேட தேவையுடைய மாணவர்களால்,  செய்யப்பட்ட கைவேலை பொருட்கள் இக் கண்காட்சியில், பார்வைக்கு வைக்கப்பட்டிருந்து.

இந்நிகழ்வில், மாகாணக் கல்வித் திணைக்கள இணைப்பாளர் எஸ்.ஜெனார்த்தனன், பாடசாலை அதிபர் திருமதி.எஸ்.யுவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X