Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 01 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை, ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்துக்கான புதிய கனிஷ்ட விஞ்ஞான ஆய்வு கூடம், அதிபர் எம்.எம்.எம்.முகைஸ் தலைமையில், இன்று (01) திறந்து வைக்கப்பட்டது.
இந்பத் புதிய ஆய்வு கூடத்தை, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப், உத்தியோகபூர்வமாக திறந்துவைத்து, மாணவர்களின் பாவனைக்குக் கையளித்தார்.
பிரதியமைச்சரை பாடசாலை மாணவர்கள், கலாசார ரீதியாக உற்சாக வரவேற்பளித்தார்கள்.
கல்வி அமைச்சின் "அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" தேசிய வேலைத் திட்டம் 2016-2020 திட்டத்தின் கீழ், குறித்த ஒரு மாடிக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.
14 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இப்புதிய ஆய்வு கூடம், பல நவீன வசதிகளைக் கொண்ட கற்றல் செயற்பாடுகளை உள்ளடக்கியுள்ளது.
குறித்த கட்டடத் திறப்பு வைபவத்தில், திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி ஜே.அருளானந்தம், பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டொக்டர் ஹில்மி முகைதீன் பாவா, இணைப்பாளர்களான ஈ.எல்.அனீஸ், எம்.பி.எம்.முஸ்தபா, திருகோணமலை நகர சபை உறுப்பினர் எம்.எம்.எம்.முக்தார், பிரதி கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல்) எம்.ஏ.எம்.உனைஸ் உட்பட பெற்றார்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
8 hours ago
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 Aug 2025
16 Aug 2025