தீஷான் அஹமட் / 2017 டிசெம்பர் 17 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர் வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெருகல் பிரதேச சபைக்கு உட்பட்ட மக்கள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் புனர் வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சியின் வேட்பாளர்களுக்கு தங்களது ஒத்துழைப்புக்களை வழங்கி முன்னாள் போராளிகளை கௌரவப்படுத்துவார்கள் என்கின்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக புனர் வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்தார்.
வெருகல் பூமரத்தடிச்சேனை கிராமத்தில் நேற்று (16) மாலை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கும் போது, நாங்கள் போராளிகளாக இருந்த சந்தர்ப்பத்தில் வெருகல் பிரதேச மக்களின் இன்ப துன்பங்களில் கலந்திருக்கின்றோம்.அவர்களது உணர்வுகளும் தேவைகளும் எங்களுக்கு நன்றாகவே தெரியும்.நிச்சயமாக அவர்கள் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் எங்களது கட்சிக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவார்கள்.
எங்களது கட்சியிடம் ஊழல் கிடையாது மக்களுக்கு நிறைவான சேவையினை வழங்குவதற்காகவே இம்முறை முதன் முதலாக தேர்தலில் களம் இறங்கியிருக்கின்றோம்.முன்னாள் போராளிகளான நாங்கள் நல்லதொரு தலைவரின் சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் வளர்க்கப்பட்டவர்கள் இதனால் மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்தே அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
அத்தோடு மாவீரர்களையும் ,முன்னாள் போராளிகளையும் வெருகல் பிரதேச மக்கள் கௌரவப்படுத்த வேண்டுமாக இருந்தால் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் வெருகல் பிரதேச சபையில் 05 வட்டாரங்களில் போட்டியிடும் புனர் வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு தமது பூரண ஆதரவினை வழங்க வேண்டுமெனவும் இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்.
48 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago