ஏ.எம்.ஏ.பரீத் / 2018 மார்ச் 21 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - தம்பலகாமம் வீதி, கச்சக் கொடித்தீவுப் பகுதியில் சைக்கிளுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் சைக்கிளில் பயணித்த சிறுவன், காயமடைந்த நிலையில், கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (20) பிற்பகல் 2 மணியளில் இடம் பெற்ற இவ்விபத்தில், கச்சக் கொடித்தீவு, புதுக்குடியுப்புப் பாடசாலையொன்றில் தரம் 5 இல் கல்வி பயிலும் மாணவனே, இவ்வாறு காயமடைந்துள்ளார்.
இம்மாணவன், பாடசாலை முடிந்து சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, கந்தளாய் பிரதேசத்தில் இருந்து பெண்ணொருவர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கள் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவித்த கிண்ணியா போக்குவரத்துப் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
21 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
34 minute ago